பதிவு செய்த நாள்
01
செப்
2016
12:09
திருத்தணி: திருத்தணி ஒன்றியம், பி.ஆர்.பள்ளி கிராமத்தில், கங்கையம்மன் கோவிலில், ஜாத்திரை விழா நேற்று நடந்தது. விழாவை ஒட்டி, காலையில், அம்மன் கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தன. மாலையில், பூ கரகமும், இரவு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, மாலையில், திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். விழாவில், புச்சிரெட்டிப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.