பதிவு செய்த நாள்
01
செப்
2016
12:09
ஊத்துக்கோட்டை: பெரியாயி அம்மன் கோவிலில், இன்று, அமாவாசை தினத்தை ஒட்டி, ஊஞ்சல் சேவை விழா நடைபெற உள்ளது. எல்லாபுரம் ஒன்றியம், எல்லம்பேட்டை கிராமத்தில் உள்ளது, பெரியாயி அம்மன் கோவில். பக்தர்கள் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட இக்கோவிலில், அம்மன், 20 அடி நீளத்தில் படுத்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு, ஒவ்வொரு அமாவாசை நாளில், சிறப்பு பூஜைகள் நடைபெறும். இன்று அமாவாசை தினத்தை ஒட்டி, இரவு, 7:30 மணிக்கு, சக்தி கரகம் புறப்பாடு, இரவு, 9:30 மணிக்கு, அம்மனுக்கு வழிபாடு, நள்ளிரவு, 12:30 மணிக்கு, ஊஞ்சல் சேவை (அம்மனுக்கு தாலாட்டு) நிகழ்ச்சி நடைபெறும். இதில், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.