விழுப்புரம்: வாணியம்பாளையம் லஷ்மி நரசிம்மர் கோவிலில் வரும் ௩ம் தேதி உறியடி உற்சவ விழா நடக்கிறது. விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையத்தில் கனகவல்லி தாயார் சமேத லஷ்மி நரசிம்மர் பெருமாள் கோவில் உள்ளது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வரும் ௩ம் தேதி, மதியம் 2:00 மணியளவில், மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கனகவல்லி தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை ௪:00 மணியளவில் பெருமாளுக்கு கண்ணன் அலங்காரம் செய்து வைத்து சாற்று முறை செய்யப்பட்டு உறியடி உற்சவமும், சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது.