பதிவு செய்த நாள்
01
செப்
2016
12:09
ஈரோடு: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி தாலுகா, ஆதிகுன்னத்தூர், பூலாங்குளம் விநாயகர் - வெள்ளைக்கால் ஐயன் - கன்னிமார் கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 4ம் தேதி நடக்கிறது. கடந்த, 28ம் தேதி காலை, 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. வரும், 3ம் தேதி காலை, 10 மணிக்கு தீர்த்தக்குடம், கலசங்கள் ஆகியவை குன்றபுரீஸ்வரர் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. மாலை, 6 மணிக்கு இறைவன் அனுமதி பெறுதல், காப்பு அணிவித்தல், முதல்கால யாக வேள்வி, தீபாராதனை நடக்கிறது. இரவு, 8 மணிக்கு எண் வகை மருந்து சாற்றுதலும், 4ம் தேதி காலை, 6 மணிக்கு நாடி சந்தானம், தீபாராதனை, 8.30 மணிக்கு வெள்ளைக்கால் ஐயன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.