பதிவு செய்த நாள்
01
செப்
2016
12:09
ஓசூர்: ஓசூர் கோதண்டராம சுவாமி கோவிலில், நான்கு நாட்கள் நடந்த பவித்ர உற்சவ விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஓசூர் நேதாஜி சாலையில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில், பவித்ர உற்சவ விழா, 29ம் தேதி மாலை, 6 மணிக்கு, வாஸ்து ஹோமம், அங்குரார்ப்பணம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. நேற்று முன்தினம், புண்யாஹவாசனம், பவித்ர பிரதிஷ்டை, கும்ப மண்டல பிரதிஷ்டை, முதல் கால பூர்ணாகுதி, திருஷ்டி ஹோமம், இரண்டாம் கால ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், நேற்று காலை, மூன்றாம் கால ஹோமம், பூர்ணாகுதி சாற்று முறை, நான்காம் கால ஹோமம், 90 ஆராதனம், பெருமாள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவின் நான்காவது நாளான இன்று (செப்., 1) காலை, 8 மணிக்கு, ஐந்தாம் கால ஹோமம், 9 மணிக்கு பெருமாள் புறப்பாடு, 10.30 மணிக்கு தீர்த்தவாரி, 11.30 மணிக்கு மகா நெய்வேத்தியம், மதியம், 12 மணிக்கு சாற்றுமுறை மற்றும் பிரசாத வினியோகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.