பதிவு செய்த நாள்
28
செப்
2011
10:09
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா இன்று துவங்கி அக்.,6 வரை நடக்கிறது. முதன்முறையாக அம்மன் வரலாறு மற்றும் ஆதிசங்கரர் வழிபாடு முறைகள் குறித்த கொலு பொம்மைகள் ரூ.3 லட்சம் செலவில் வைக்கப்பட்டுள்ளன. தினமும் மாலை அம்மன் கொலு அலங்காரம், சொற்பொழிவுகள், நாட்டியம் உட்பட கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. இன்று மாலை அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். செப்.,29ல் அர்த்தநாரீஸ்வரர், செப்.,30ல் ஊஞ்சல், அக்.,1ல் மேருவைச் செண்டால் அடித்தல், அக்.,2ல் பட்டாபிஷேகம், அக்.,3ல் பார்வதி திருக்கல்யாணம், அக்.,4ல் மகிஷாசுரமர்த்தினி, அக்.,5ல் சிவபூஜை, அக்.,6ல் விஜயதசமி அலங்காரம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், நிர்வாக அதிகாரி ஜெயராமன் செய்துள்ளனர்.