உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ரேணுகா புத்துமாரியம்மன் கோவில், உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமிபுரம் ஸ்ரீசமயபுரத்துஅங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசையொட்டி ஊஞ்சல் உற்சவம், தீச்செட்டி ஏந்தி வழிபாடு நடந்தது. உளுந்தூர்பேட்டையில் சேலம் ரோட்டிலுள்ள ஸ்ரீரேணுகா புத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசையொட்டி நேற்று இரவு 8 மணிக்கு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வலம் வந்து, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பெண்கள் தீச்செட்டி ஏந்தி வழிப்பட்டனர். அதே போல் உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமிபுரத்திலுள்ள ஸ்ரீசமயபுரத்துஅங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசையொட்டி ஊஞ்சல் உற்சவமும், தீச்செட்டி ஏந்தி வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.