குருவித்துறை: குருவித்துறை குருபகவான் கோயிலில் குருபகவான் தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதுரை மாவட்டம் சோழவந் தான் குருவித்துறையில் சுயம்பு குருபகவான் சுவாமி சன்னதி உள்ளது. ஆக.2ல் காலை 9.27 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னிராசிக்கு குரு பகவான் இடம் பெயர்ந்தார். இதையொட்டி இங்கு ஏராளமான பக்தர்கள் குருபகவானை தரிசித்தனர். நேற்று ,வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நாள் என்பதால் பக்தர்களுக்கு சிறப்புபூஜை நடைபெற்றது. சிறப்பு பூஜையை ஒட்டி குருபகவான் தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.