ஸ்ரீவில்லிபுத்துார் விநாயகர் ஊர்வலத்திற்கு 252 சிலைகள் தயார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2016 11:09
ஸ்ரீவில்லிபுத்துார்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடக்க உள்ள ஊர்வலத்திற்கு 252 சிலைகள் தயாராகி, ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா இந்து முன்னணி சார்பில் ஒவ்வொரு தாலுகாவிலும் நடக்க உள்ளது. இதற்காக பல்வேறு வகை வடிவங்களில் 252 சிலைகள் தயாராகி, ராஜபாளையம் 35, ஸ்ரீவில்லிபுத்துார் 33, சிவகாசி 58, சாத்துார் 21, விருதுநகர் 69, அருப்புக்கோட்டை 17, ஏழாயிரம்பண்ணை 7, காரியாபட்டி 4, பந்தல்குடி மற்றும் வத்திராயிருப்பு 2 என 252 சிலைகள் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அந்தந்த பகுதியில் பூஜிக்கப்பட்டு 7 ம்தேதி ஊர்வலமாக எடுத்து செல்லப் பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.