பதிவு செய்த நாள்
03
செப்
2016
11:09
திருப்பூர்:விநாயகர் சதுர்த்தி விழா, 5ல் கொண்டாடப்படுகிறது. பொது இடங்கள், வீடுகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில், சிலைகள் தயாரிக்கப்பட்டு, நீர் நிலைகளுக்கு கேடு விளைவிக்கப்படுகிறது.இச்சூழலில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில், தஞ்சாவூர் பகுதிகளிலுள்ள தொழிலாளர்களால், முற்றிலும் களி மண் கொண்டு, கைகளால் விநாயகர் சிலைகள் செய்து, இயற்கை வண்ணம் பூசப்பட்ட சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த சிலைகள், நெருப்பில் சுடப்படாமல், விற்பனைக்கு வருவதால், எளிதில் கரையும்.சிலை விற்பனை செய்து வரும், கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த முருகேசன் கூறுகையில், ""வெற்றிலை விநாயகர், கோபுர விநாயகர், தாமரை விநாயகர், பிள்ளையார்பட்டி விநாயகர், மைசூர் விநாயகர் என பல வகையான விநாயகர் சிலைகள், அரை அடி முதல் மூன்று அடி வரை விற்பனைக்கு வந்துள்ளது.