பதிவு செய்த நாள்
03
செப்
2016
11:09
சென்னை: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழாவை முன்னிட்டு, செப்., 4, 7 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழாவை முன்னிட்டு, 6-வது அவென்யு, 4-வது பிரதான சாலை, 2 மற்றும் 7வது அவென்யுக்களில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை. மாலை 4 மணி முதல் எம்.ஜி., சாலை 7-ஆவது அவென்யு சந்திப்பு, 6-வது அவென்யு, 4-வது பிரதான சாலை சந்திப்பு, 3-வது அவென்யு சந்திப்பிலிருந்து மாதா ஆலயத்தை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
எங்கே நிறுத்தலாம்?: அதேபோல், எல்.பி. சாலை, தாமோதரபுரத்திலிருந்தும், பெசன்ட் நகர் பேருந்து நிலையம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. 32, 33-ஆவது குறுக்குத் தெருக்களில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடல்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பெசன்ட் நகர் 4-வது அவென்யு, கஸ்டம்ஸ் காலனி, 2-வது குறுக்குத் தெரு, 5-வது அவென்யு, ஊருர் குப்பம் சாலை, 32-வது குறுக்குத் தெரு, பெசன்ட் நகர், 17, 21 மற்றும் 24 முதல் 28-வது வரை உள்ள குறுக்குத் தெருக்கள், எலியட்ஸ் கடற்கரை, 6-ஆவது அவென்யுவில், கோஸி கார்னர் முதல், 5-வது அவென்யு சந்திப்பு வரை ஒரு புறமாக வாகனங்கள் நிறுத்தலாம். மாலை, 4:00 மணி முதல் மாநகர் பேருந்துகள் மட்டும் டாக்டர் முத்துலட்சுமி சாலையிலிருந்து, பெசன்ட் அவென்யு சாலைக்கு இடது புறம் திரும்ப அனுமதி இல்லை. பெசன்ட் அவென்யு சாலைக்கு செல்ல வேண்டிய மாநகர பேருந்துகள் அனைத்தும் எல்.பி.சாலை, எம்.ஜி.சாலை வழியாகச் செல்ல வேண்டும்.மாநகரப் பேருந்துகள், எம்.ஜி.சாலை, பெசன்ட் நகர், 1-வது பிரதான சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடைந்து, வெளியே செல்லும் வழியாக திருவான்மியூர் பகுதிக்குச் செல்லும் சாஸ்திரி நகர், 1-வது அவென்யு வழியாகவும் செல்லலாம்.
மாற்று வழியில்...: இரவு, 8:00 மணிக்கு மேல் எல்.பி.,சாலை ஒரு வழிப் பாதையாகப் பயன்படுத்தப்படும். அடையாறு பாலத்தில் இருந்து, திருவான்மியூர் சிக்னல் செல்லும் வாகனங்கள் எல்.பி. சாலை வழியாகச் செல்லலாம். திருவான்மியூர் சிக்னலில் இருந்து, எல்.பி.சாலையில் வரும் வாகனங்கள் எல்.பி.சாலை இந்திரா நகர், 3-வது அவென்யு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு இந்திரா நகர் 3-வது அவென்யு, கஸ்துாரிபாய் நகர், 3-வது குறுக்குத் தெரு வழியாக படேல் சாலையைச் சென்றடையலாம். படேல் சாலையில் இருந்து கஸ்துாரிபாய் சாலை, 3-வது குறுக்குத் தெரு செல்வது தடை செய்யப்படுகிறது. அந்த வழியாக வரும் வாகனங்கள் எல்.பி., சாலை வழியாக கஸ்துாரிபாய் நகர் செல்லலாம்.இவ்வாறு போக்குவரத்து போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.