கொல்லூரு மூகாம்பிகை கோவிலில் இன்று நவராத்திரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2011 11:09
கொல்லூரு:நவராத்திரி உற்சவம் இன்று கொல்லூரு மூகாம்பிகை கோவிலில் துவங்குகிறது. அக்., 5ம் தேதி காலை சண்டிகா யாகமும், தேரோட்டமும் நடைபெறும். கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே, கொல்லூரில் பிரசித்திப் பெற்ற மூகாம்பிகை கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி உற்சவங்கள், வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இவ்வாண்டுக்கான உற்சவம் இன்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கும். உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான மகா சண்டிகா யாகம் அக்., 5ம் தேதி காலை 11.30 மணிக்கு நடக்கும். தொடர்ந்து அன்று தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெறும். அக்., 6ம் தேதி விஜயதசமி அன்று வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை 4 மணிக்கு முன்பே சன்னிதி திறக்கப்படும்.