பதிவு செய்த நாள்
06
செப்
2016
12:09
விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. இதேபோல, வரும் 8ம் தேதி, குன்னுாரில் நடக்கும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்துக்காக, இந்து முன்னணி சார்பில், தாலுகா முழுவதும்,72 இடங்களில்,108 சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் துவக்கப்பட்டன. * கூடலுார் விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை கணபதி ஹோமம், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், திரளான, பக்தர்கள் பங்கேற்று, விநாயகரை தரிசித்தனர். பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டன. மாலை, 5:30 மணிக்கு, அலகரிக்கப்பட்ட விநாயகர் கோவிலை சுற்றி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.