பதிவு செய்த நாள்
06
செப்
2016
12:09
சூலுார்: சூலுார் வட்டாரத்தில், இந்து இயக்கங்கங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், 128 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. சூலுார் பகுதியில் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் சார்பில், 85, இந்து மக்கள் கட்சி சார்பில் நான்கு, பொதுமக்கள் தரப்பில், 15 என, மொத்தம், 104 விநாயகர் சிலைகள், நேற்று அதிகாலை பிரதிஷ்டை செய்யப்பட்டன. கணபதி ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து குழந்தைகளுக்கான பேச்சு, கோலப்போட் டிகள் நடந்தன. கருமத்தம்பட்டி வட்டாரத்தில் இந்து முன்னணி சார்பில், 24 இடங்களிலும், பொதுமக்கள் சார்பில் ஆறு இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டன. பாரதிபுரத்தில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில், 20வது ஆண்டாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகள் நடந்தன. நாளை மாலை சூலுார் பெருமாள் கோவில் திடல், கருமத்தம்பட்டி ஆகிய இடங்களில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டங்களில் பா.ஜ., பொதுசெயலாளர் வானதி சீனிவாசன், இ.மு. பொது செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் பேசுகின்றனர். தொடர்ந்து விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.