பதிவு செய்த நாள்
06
செப்
2016
12:09
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அத்தியூர்திருக்கை கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் சுவாமி, வீரன் மற்றும் வெட்காளியம்மன் கோவிலில் , கடந்த 3ம் தேதி மாலை கணபதி ேஹாமமும், இரவு வாஸ்து சாந்தி, முதல்கால யாகபூஜை நடந்தது. கடந்த 4ம் தேதி இரண்டாம் கால யாகபூஜை, கோ பூஜை மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு, பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் சுவாமி, வீரன் சுவாமி, விநாயகர், முருகன், ஏழுமலையான், முனீஸ்வரன், வெட்காளியம்மன், அங்காளம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.