மேட்டூர்: மேட்டூர் காவிரியாற்றில் நேற்று ஒரே நாளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சதுர்த்தி முடிந்து, மூன்றாவது நாளான நேற்று, சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து பக்தர்கள் விநாயகர் சிலைகளை கொண்டு வந்து மேட்டூர் காவிரியாற்றில் கரைத்தனர். ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால், பெரிய விநாயகர் சிலைகள் நீரில் கரையாமல், தண்ணீரில் மிதந்து சென்றன. நேற்று ஒரே நாளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் காவிரியாற்றில் கரைக்கப்பட்டன. முன்னதாக பக்தர்கள் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு வந்ததால், மேட்டூர் கிழக்கு பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.