விருதுநகர், விருதுநகர் என்.ஜி.ஓ., காலனி வழிவிடு விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தன. பிற்பகல் யாகம், பக்தர்களின் ஆன்மிக பாடல் நிகழ்ச்சியுடன் சுவாமி வீதி உலா நடந்தது. சத்திர ரெட்டியபட்டி விலக்கு, சர்க்யூட் ஹவுஸ், என்.ஜி. ஓ., காலனி வழியாக வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை ஜெயராமன், அர்ச்சகர் முத்துராமன் மற்றும் நிர்வாகத்தினர் செய்தனர்.