பதிவு செய்த நாள்
12
செப்
2016
12:09
காஞ்சிபுரம்: மாவட்டம் முழுவதும், பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளில், 670 சிலைகள் நேற்று, நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. கடந்த திங்கட்கிழமையன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,625 விநாயகர் சிலைகளை, பொது இடங்களில் வைத்து வழிபட, மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது. அதன்படி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை கரைக்கப்பட்ட சிலைகள் போக, மீதமிருந்த, 679 சிலைகளில், 670 சிலைகள் நேற்று கரைக்கப்பட்டன. பல்வேறு காரணங்களுக்காக, ஒன்பது சிலைகளை தவிர்த்து, மொத்தமிருந்த சிலைகளில், 1,616 சிலைகளும் கரைக்கப்பட்டன.