பெருமாளுக்கு ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்றெல்லாம் துணைவியர் இருக்க, அவர் பிரம்மச்சாரியாக இருந்தது எப்போது என்று தானே நினைக்கிறீர்கள். அவர் வாமன அவதாரம் எடுத்து பூமிக்கு வந்த போது பிரம்மச்சாரியாக வந்தார். ஆனால், மனைவி ஸ்ரீதேவியான லட்சுமி அவரது மார்பில் மறைந்து வந்தாள். உலகுக்கே அள்ளித்தரும் லட்சுமி மார்பில் இருக்கும் போது, மகாபலி மன்னனிடம் எப்படி யாசகம் கேட்பது என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. உடனே கிருஷ்ணார்ஜுனம் என்னும் கருப்பு போர்வையை போர்த்தி தாயாரை மறைத்துக் கொண்டார். இதன்பின் லட்சுமியின் அருட்பார்வை மகாபலிக்கு கிடைக்காமல் போய் விட்டது. ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விட்டார் வாமனர்.