பதிவு செய்த நாள்
29
செப்
2011
11:09
சுரண்டை : சுரண்டை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சீனிவாச பெருமாள் கோயில் சுரண்டையில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு புரட்டாசி சனியன்று மழை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. காலையில் லட்சுமி ஹோமம், சகஸ்ரநாமம், திருமஞ்சனம், அபயகஸ்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், அலங்காரம், அகண்ட ராமநாமாவழி சிறப்பு பூஜை, பஜனைகளுடன் கூடிய தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் விண்டர் முத்துக்கிருஷ்ணர், மகேஸ்வரி முத்துக்கிருஷ்ணர், டாக்டர் தங்கமதி, பழனிச்சாமி முதலியார், கிட்டுப்பிள்ளை, சுப்புமாணிக்கவாசகம் பிள்ளை, செல்லத்துரை ஆசிரியர், வேல்ச்சாமி ஆசிரியர், மணிக்குட்டி, அழகுசுந்தரம், பரமசிவன், பிரின்ஸ் நடராஜன், சமுத்திரம், வீரவேல் ரத்தினசாமி, துரைராஜ், கோபால் ஆசாரி, சுப்பையா, முத்துலெட்சுமி முருகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உபயதாரர் பாண்டியராஜ், மற்றும் திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் செல்லையா, அறங்காவலர் குழு தலைவர் பேச்சிமுத்துப்பாண்டியன் மற்றும் பலர் செய்திருந்தனர்.