பதிவு செய்த நாள்
19
செப்
2016
12:09
திருப்பூர் : ""மகாளபக்ஷ காலத்தின் மகியை உணர்ந்து, 15 நாட்களும் பித்ருக்களை வணங்கினால், சகல சவுபாக்யங்களும் நம்மைத்தேடி வரும், என, ஸ்ரீமத் அஹோபில மடத்தின் ஆஸ்தான வித்வான் ராஜகோபாலன் சுவாமி பேசினார். முக்தி மார்கம் டிரஸ்ட் இரண்டாம் ஆண்டு துவக்க விழா, திருப்பூர், சவுடாம்பிகை அம்மன் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. டிரஸ்ட் நிறுவனர் குமரன் தலைமை வகித்தார். ஸ்ரீமத் அஹோபில மடத்தின் ஆஸ்தான வித்வான் ராஜகோபாலன் சுவாமி, வைதிகஸ்ரீ ஆசிரியர் ராஜகோபால கனபாடிகள் சுவாமி ஆகியோர், மஹாளயபக்ஷ காலம், மகாளய அமாவாசையின் மகிமைகள் குறித்து பேசினர்.
ராஜகோபாலன் சுவாமி பேசியதாவது: ஆதரவற்ற பிணங்களுக்கு இறுதிகாரியம் செய்வது, அஸ்வமேத யாகத்தைவிட சிறந்த புண்ணியத்தை வழங்கும் என, மகாபெரியவர் பலமுறை கூறியுள்ளார். அத் தகைய சேவை பணியை, முக்கி மார்கம் டிரஸ்ட், திருப்பூரில் செய்து வருவது புண்ணியகாரியம். உபதேசம் செய்வதும், கேட்பதும் எளிதானது; அதனை பிற்றுவது குறைவாக இருக்கிறது. நமது பித்ருகளை போற்றி வணங்க வேண்டியது நமது கடமையாகிறது. மகிமை வாய்ந்த, மஹாளயபக்ஷ காலத்தில், 15 மண்ணுலகை விட்டுச்சென்ற நமது முன்னோர், பூமிக்கு வந்து, நம்முடன் தங்கியிருப்பார்கள். அதற்காக, பித்ருக்களுக்கு திதி கொடுத்து, தர்ப்பணம் செய்து மகிழ்விக்க வேண்டும். மகாளயபக்ஷ புண்ணிய காலத்தில், தவறான சிந் தனையை மறந்து, நமக்காக தியாகங்கள் செய்த நமது முன்னோர்களை மனதார நினைத்து, பித்ரு தர்பணம் செய்ய வேண்டும். நமக்காக வாழ்ந்தவர்களுக்கு, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தர்பணம் செய்வது புண்ணியத்தை தேடித்தரும். இந்த, 15 நாட்களும் முன்னோர்களை வணங்கினால், சகல சவுபாக்யங்களும் நம்மைத்தேடி வரும். இரண்டு வாரங்கள், தர்பணம் கொடுக்க முடியாதவர்கள், மகாளய அமாவாசை அன்று, தனது குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் தர்பணம் கொடுக்கலாம்.