பதிவு செய்த நாள்
20
செப்
2016
11:09
திருக்காலிமேடு: திருக்காலிமேடு பெரியபாளையத்து பவானியம்மன், ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில், ஆடித்திருவிழாவை யொட்டி, கூழ்வார்த்தல், தீமிதி மற்றும் ஊஞ்சல் உற்சவ விழா நடந்தது. காஞ்சிபுரம், திருக்காலிமேட்டில் உள்ள , பெரியபாளையத்து பவானியம்மன், ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு, 26ம் ஆண்டு ஆடித்திருவிழா, 12ம் தேதி, பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 16ம் தேதி, அம்மன் வீதியுலா, பக்தர்கள் அலகு குத்துதல், கொக்கி போடுதல் நிகழ்ச்சியும், பகல், 12:00 மணிக்கு கூழ் வார்த்தலும் நடந்தது. மாலை , 6:00 மணிக்கு, தீமிதி விழாவும், அதைத்தொடர்ந்து, பெரியபாளையத்து பவானி அம்மனும், காஞ்சி காமாட்சி அம்மனும் ஊஞ்சல் சேவையில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.