பதிவு செய்த நாள்
20
செப்
2016
11:09
ஆத்தூர்: ஆத்தூர் பஸ்ஸ்டாண்ட் அருகே, வெள்ளை விநாயகர் கோவிலில், புரட்டாசி, மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று இரவு, 7:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, தீபாராதனை நடந்தது. மூலவர் விநாயகர், சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர், ராணிப்பேட்டை செல்வ விநாயகர் கோவில், கடைவீதி விநாயகர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
* பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், பழைய பாலம் அருகே, நூற்றாண்டு பழமையான ராஜகணபதி ஆலயத்தில், சங்கடஹர சதுர்த்தியையொட்டி, நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. பூஜை செய்யும்போது, அமர்ந்த நிலையில் பூஜை செய்வது, இக்கோவிலின் சிறப்பம்சம். சதுர்த்தியையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மூலவர், வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.