பதிவு செய்த நாள்
21
செப்
2016
11:09
அம்மாபேட்டை: சேலம், அம்மாபேட்டை செங்குந்தர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று, 108 சங்காபிஷேக விழா நடந்தது. அம்மாபேட்டையில், செங்குந்தர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. புரட்டாசி மாதத்தையொட்டி, சிறப்பு பூஜைகள் தினமும் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நேற்று காலை, 7:00 மணிக்கு மங்கள இசையுடன் பூஜை துவங்கியது. தொடர்ந்து விக்னேஸ்வரர் பூஜை, வேதிகா அர்ச்சனை நடந்தது. பின்னர், சுப்பிரமணிய சுவாமிக்கு, 108 சங்கு பூஜை நடந்தது. அதன்பிறகு, 108 மூலிகை ஹோமம் நடந்தது. மதியம், 11:00 மணிக்கு மூலவர் சுப்பிரமணி சுவாமிக்கு மஹா அபிஷேகம் நடந்தது. 108 கிலோ பஞ்சாமிர்த அபிஷேகம், 108 லிட்டர் பால் அபிஷேகம், கலசாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் சாத்தப்பட்டது.