புதுச்சேரி : நவராத்திரி விழாவையொட்டி நோணாங்குப்பம் திரிசூலியம்மன் கோவிலில் கொலு வைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் நவராத்திரி விழா கடந்த 27ம் தேதி துர்கா தேவி ஹோமத்துடன் துவங்கியது. கடந்த 28ம் தேதி பாலதிரிபுரசுந்தரி ஹோமம் நடந்தது. காயத்திரி ஹோமம் நேற்று நடந்தது. அன்னபூர்ணா ஹோமம் இன்று நடக்கிறது. நாளை (1ம் தேதி) லலித திரிசூலி ஹோமம், 2ம் தேதி சரஸ்வதி ஹோமம், 3ம் தேதி மகாலட்சுமி ஹோமம், 4ம் தேதி மகிஷாசூரமர்த்தினி ஹோமம், 5ம் தேதி ராஜராஜேஸ்வரி ஹோமம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.