செஞ்சி : செஞ்சி பி. ஏரிக்கரை முருகன் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. செஞ்சி பி.ஏரிக்கரையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழா நடந்தது. இதைமுன்னிட்டு காலை 9:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். தொடர்ந்து கலச பிரதிஷ்டையும் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமமும் செய்தனர். காலை 11:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கலச அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் கமலக்கன்னியம்மன் கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் விழா குழுவினர் உட்பட திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.