பதிவு செய்த நாள்
23
செப்
2016
12:09
சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல்கள் இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி, கோவில் செயல் அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. மகா மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. வங்கி அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டனர். கோவில் ஆய்வாளர்கள் ராமநாதன், ஊழியர்கள் வெங்கடேசன், வாசு, முத்துக்குமரன், ராஜ்குமார் மற்றும் கோவில் சிப்பந்திகள் உடனிருந்தனர். உண்டியலில் 6 லட்சத்து 26 ஆயிரத்து 212 ரூபாய் இருந்தது. மேலும், தங்கம் 65.500 கிராம், வெள்ளி பொருள்கள் 118 கிராம், வெளிநாட்டு கரன்சிகள், மலேசியா ரிங்கட், அமெரிக்கா டாலர், சிங்கப்பூர் டாலர், இலங்கை ரூபாய் இருந்தது. இதனை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் சரிபார்த்தனர். பின்னர், சிதம்பரம் கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் டெப்பாசிட்டாக செலுத்தப்பட்டது.