Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இரட்டை பிள்ளையார் கோயிலில் ... சோழர் கால துறைமுகம்: ஆய்வில் கண்டுபிடிப்பு சோழர் கால துறைமுகம்: ஆய்வில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லிங்க பைரவியில் மஹாளய அமாவாசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
லிங்க பைரவியில் மஹாளய அமாவாசை

பதிவு செய்த நாள்

29 செப்
2016
11:09

ஈஷா யோகாமையம் ( கோவை) : பொதுவாகவே அமாவாசை நாட்கள் பூமியில் ஏற்படுத்தும் அதிர்வுகளின் தாக்கம் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும், தசரா பண்டிகையின் துவக்கமாக அமையும் இந்த மஹாளய அமாவாசைநாள், பித்ரு கடன் செய்வதற்கு உகந்த நாளாக உள்ளது. செப்டம்பர் 30ம் தேதி வெள்ளி கிழமை நிகழும் அமாவாசையானது மிகவும் தனித்துவம் வாய்ந்த மஹாளய அமாவாசையாக அமைகிறது.

நம்முடைய மூதாதையர்களுக்கு நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமான நாளாக மஹாளய அமாவாசை விளங்குகிறது. அன்றைய தினம் லிங்க பைரவியில் மாலை 6 மணியிலிருந்து நடுநிசி 12 மணி வரை சிறப்பு அர்ப்பணிப்பாக அக்னி அர்ப்பணம் நடைபெறவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, பித்ருக்களுக்கும் (நம் மூதாதையர்) மற்றும் இறந்த குடும்ப உறவுகளுக்கும் காலபைரவ ஷாந்தி நடைபெறவிருக்கிறது.

சத்குருவின் வழிகாட்டுதலில் தேவியின் அருள் பெற்று, இறந்தவர்கள் நற்கதி அடைய வேண்டி செய்யப் படக்கூடிய செயல்முறைகளே காலபைரவ கர்மா மற்றும் ஷாந்தி. சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காலபைரவர் முன்னிலையில், சத்குருவிடமிருந்து முறைப்படி கர்மா செய்யும் வழிமுறையை அறிந்துணர்ந்த பிரம்மச்சாரிகளால் காலபைரவ கர்மா மற்றும் ஷாந்தி ஆகியவை நடத்தப்படுவதால் மிகவும் சக்தி வாய்ந்த செயல்முறையாக உள்ளது. தங்களது குடும்ப உறவுகளை இழந்து மீளாத் துயரத்தில் வருபவர்கள், காலபைரவ கர்மா முடித்துவிட்டுச் செல்லும்போது இறந்த உயிருக்கு தாங்கள் செய்ய வேண்டியவற்றைச் செய்த நிம்மதியுடன் செல்கிறார்கள். தங்கள் பித்ருக்களுக்கு காலபைரவ ஷாந்தி செய்பவர்கள், தங்கள் நன்றி உணர்வை வெளிப்படுத்திய திருப்தியில் செல்கிறார்கள்.

குறிப்பு: காலபைரவ கர்மா, இறந்த குறிப்பிட்ட தினங்களுக்குள் செய்வது. காலபைரவ சாந்தி, இறந்த உயிருக்கு அம்மாவாசை அன்று செய்வது. காலபைரவ சாந்தியை ஒவ்வொரு வருடமும் செய்யலாம், அல்லது முன்பே பதிவு செய்து 10 வருடங்களுக்கு (ஒவ்வொரு வருடமும் மஹாளய அமாவாசை அன்று) தொடர்ச்சியாக செய்து கொள்ளலாம். காலபைரவ சாந்தி செய்வதற்கு இறந்தவரின் ஒரு புகைப்படமும், பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்ந்த தேதியும் தேவைப்படுகிறது. செயல்முறையின்போது நேரடியாக வந்து கலந்துகொள்ள இயலாதவர்கள் தங்களின் முன்னோர்கள் அல்லது இறந்த உறவினர்களின் புகைப்படங்களை ஸ்கேன் செய்து அத்துடன் பிறப்பு மற்றும் இறப்பு தேதியையும் குறிப்பிட்டு மின்னஞ்சலில் அனுப்பலாம். பிறந்த தேதி சரியாக தெரியவில்லை என்றால், பிறந்த வருடத்தையாவது குறிப்பிட வேண்டும். இறந்த வருடமும் தெரியாதபட்சத்தில், இறந்தவர்களின் பெற்றோர் பெயர்கள் (தாய் மற்றும் தந்தை இருவரின் பெயரும்) குறிப்பிட்டால் போதுமானது. மேலும் தகவல்களைப் பெற : 9443365631, kbprocess@lingabhairavi.org

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar