பதிவு செய்த நாள்
01
அக்
2016
12:10
கல்விக்கடவுளான சரஸ்வதி தேவியின் அருளை மாணவர்கள் பெற, ஆனைகட்டி, ஆர்ஷ வித்யா குருகுலத்தால் இயக்கப்படும், "தர்மரக்ஷனசமிதி தமிழகம் முழுக்க, சரஸ்வதி நாம ஜெப வேள்வியை நவராத்திரி நாட்களில் நடத்துகிறது.
கோவை ஒப்பணக்காரவீதியிலுள்ள, அத்தி விநாயகர் கோவிலில், (அக்., 2) காலை 6:00 மணிக்கு, வேள்வி நடக்கிறது. இதில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கலாம். புரட்டாசி மாதம் அமாவாசை திதிக்கு அடுத்து, பிரதமை திதியிலிருந்து துவங்கும், "சரஸ்வதி நாமஜெப வேள்வி தொடர்ந்து பத்து நாட்களுக்கு, அடுத்து வரும் தசமி திதி வரை, அக்., 11ம் தேதி வரை தொடரும். அதிகாலை 6:00 மணியிலிருந்து 6:15 மணி வரை நடக்கும் இவ்வேள்வியில், சரஸ்வதி நமஸ்துப்பியம் என்று துவங்கும் மந்திரத்தை, 108 முறை மாணவர்கள் உரக்கக் கூற பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்ந்து சரஸ்வதிக்கு பூஜைகள் நடக்கின்றன.
மாணவர்களின் நினைவுத்திறனை மேம்படுத்துவதற்காகவும், சுறுசுறுப்புத் தண்மையை ஊக்கப்படுத்துவதற்காகவும், "ஸாரஸ்வத ஹ்ருதம் என்ற ஆயுர்வேத மூலிகையிலான நெய்யை சுவாமிக்கு அபிஷேகம் செய்து, ஜெபவேள்வியில் பங்கேற்கும், மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்க மாணவர்களுக்கு, தர்மரக்ஷன சமிதி அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு கட்டணங்கள் இல்லை.