அமரம்பேடு : அமரம்பேடு ஊராட்சியில் பராமரிப்பின்றி, இடியும் நிலையில் உள்ள கரியமாணிக்க பெருமாள் கோவிலை சீரமைக்க, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். குன்றத்துார் ஒன்றியம், அமரம்பேடு ஊராட்சியில் பழமை வாய்ந்த கரிய மாணிக்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், பல ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் குத்தகைதாரர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளன. பழமையான இந்த கோவில் தற்போது சிதைந்து காணப்படுகிறது. கோபுரத்தின் மீது மரங்கள் வளர்ந்துள்ளதால், கோவில் முழுவதும் இடிந்து விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த கோவிலை சீரமைத்து, பராமரிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.