குஜிலியம்பாறை: கூம்பூர் ஊராட்சி பாம்புலுபட்டியில் அச்சுண்டபாறை பெருமாள் கோயில் உள்ளது. சனி வார சிறப்பு பூஜை நடந்தது. பாம்புலுபட்டி, ஆட்டுக்காரன்பட்டி, குள்ளம்பட்டி, சின்னக்கோணாம்பட்டி பகுதி மக்கள் சார்பில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். கோயில் அர்ச்சகர் வரதராஜன், மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.