கடலுார்: கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் நவராத்திரி மற்றும் ஸ்ரீமத்வ ஜெயந்தி விழாவையொட்டி நேற்று முன்தினம் ஆன்மிக சொற்பொழிவு துவங்கியது. வரும் 10ம் தேதி வரை தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை தினம் ஒரு தலைப்பில் கிருஷ்ணமூர்த்தி, 1ம் தேதி தேவகி மைந்தன் என்ற தலைப்பிலும், நேற்று (2ம் தேதி) யசோதா பாலன் என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினார். இன்று வசுதேவ கிருஷ்ணன் என்ற தலைப்பிலும், 4ம் தேதி காளிய நர்தன், 5ம் தேதி கோவர்தன கோவிந்தன், 6ம் தேதி கம்சாந்தகன், 7ம் தேதி சத்யபாமா சமேதன், 8ம் தேதி குலேசன அன்பன், 9ம் தேதி சந்தான கோபாலன், 10ம் தேதி ருக்மணி காந்தன் என்ற தலைப்புகளில் சொற்பொழிவாற்றுகிறார்.