கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2016 12:10
கரூர்: கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் நவராத்திரி விழா முன்னிட்டு நேற்று காலை சிறப்பு அபிஷேகங்களுடன் துவங்கியது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து இவ்விழா வரும், 11ம் தேதி வரை நடக்கிறது. வரும், 9ம் தேதி எறிபத்த நாயனார் உற்சவம் நடக்கிறது. அன்றைய தினம் காலை, 6:30 மணிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது. நவராத்திரி முன்னிட்டு நாள்தோறும் காலை, 8:00 மணிக்கு சிறப்பு அபி?ஷக ஆராதனை நடக்கிறது. இரவு, 7:30 மணிக்கு சிறப்பு ஆராதனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரத்தினவேல்பாண்டியன் செய்து வருகிறார்.