பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி சுதர்சன ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2016 11:10
விழுப்புரம்: பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு சுதர்சன ஹோமம் நடந்தது. இக்கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு, கடந்த 30ம் தேதி ஸ்ரீ சூக்த ஹோமம் தொடங்கியது. வரும் 9ம் தேதி வரை ஒரு லட்சம் நரசிம்மர் மந்திரம் ஜெபிக்கப் படுகிறது. நேற்று, சுவாதியை முன்னிட்டு, பகல் ௧௨:௦௦ மணிக்கு ஸ்ரீ சூக்த ஹோமம், சுவாதி சுதர்சன தன்வந்திரி ஹோமம் நடந்தது. பின், பூர்ணாஹூதி, கலசநீர் ஊர்வலம் புறப்பட்டு மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. தங்க கவசத்தில் தாயாருடன் நரசிம்மர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஹோம மண்டபத்தில் உற்சவர் பெருமாள் தாயார் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலித்தார்.