முதல்வர் ஜெ.,நலம் பெற வேண்டி அ.தி.மு.க.,வினர் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2016 12:10
தேனி : தேனி வேதபுரியில் உள்ள தட்சிணாமூர்த்தி கோயிலில் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி ’ம்ருத்ஞ்ஜய ’ ஹோம சிறப்பு பூஜை மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. சுவாமி ஓம்காரநந்த மகராஜ் முன்னிலையில் ராமகிருஷ்ணசாஸ்திரிகள், ரமேஷ்குருக்கள் சிறப்பு பூஜைகளை நடத்தினர். எம்.எல்.ஏ.,க்கள் ஜக்கையன், கதிர்காமு, தேனி நகர செயலாளர் முருகேசன், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, ஒன்றிய செயலாளர்கள் கணேசன், அன்னப்பிரகாஷ், முருக்கோடை ராமர், தேனி நகராட்சி 19வதுவார்டு வேட்பாளர் நாராயணபிரபு பங்கேற்றனர். ஏற்பாடுகளை தட்சிணாமூர்த்தி கோயில் நிர்வாகி பாலகிருஷ்ண ராஜா செய்தார்.