பதிவு செய்த நாள்
04
அக்
2016
02:10
ராமநாதபுரம் : மாணவர்களிடம் கல்வி நினைவாற்றலை வளர்ப்பதற்காக மாவட்டத்தில் 175 இடங்களில் சரஸ்வதி ஞான வேள்வி துவங்கியது. ராமநாதபுரம் மாவட்ட மாணவ, மாணவிகளிடம் கல்வி நினைவாற்றலை வளர்க்கும் விதமாக தர்ம ரக்ஷன சமிதி நிறுவனர் தயானந்தர் அறிவுறுத்தல்படி நவராத்திரி விழாவை முன்னிட்டு 175 இடங்களில் சரஸ்வதி ஞான வேள்வி அக்., 1ல் துவங்கியது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை நகராட்சிகள், மண்டபம், திருப்புல்லாணி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் தினமும் காலை சூரியோதயத்திற்கு முன் நடக்கும் வேள்வி முகாமில் மாணவ, மாணவிகள் மற்றும் தர்ம ரக்ஷ சமிதி தொண்டர்கள் பங்கேற்கின்றனர். நினைவாற்றலை வளர்க்கும் வல்லாரை உள்பட 18 வகையான மூலிகைகள் அடங்கிய சரஸ்வத கிரதம் பிரசாதம் வழங்கப்படுகிறது. இவை கோவையில் உள்ள ஆயுர்வேத மையம் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மண்டபம் பேரூராட்சியில் யாதவர் தெரு, அம்பலகாரத்தெரு, எம்.ஜி.ஆர்., காலனி, பாரதி நகர், சேது நகர், சிங்காரத்தோப்பு, உமையாள்புரம் ஆகிய இடங்களில் ஞான வேள்வி நடக்கிறது. ஏற்பாடுகளை தர்ம ரக்ஷன சமிதி மாவட்ட தலைவர் வாசன், செயலர் விஜயன், பொதுச்செயலர் சங்குமுருகன், அமைப்பாளர் சண்முகம், ராமேஸ்வரம் மண்டல செயலர் நாகராஜன் செய்துள்ளனர்.