நகரி:காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் உண்டியல் காணிக்கை, நேற்று எண்ணப்பட்டது. அதில், ஒரு கோடியே, 81 லட்சம் ரூபாய் வசூலானது.சித்துார் அடுத்த, காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில் உண்டியல், நேற்று எண்ணப்பட்டது. இதில், ஒரு கோடியே, 81 லட்சம் ரூபாய் பணம், 50 கிராம் தங்கம், ஒரு கிலோ வெள்ளி உள்ளிட்டவை இருந்தன. இது, 21 நாட்களில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது.