மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவுத்தநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில், யாக பூஜை நடந்தது. தமிழக முதல்வர் ஜெ., உடல் நலம்பெற வேண்டி, அ.தி.மு.க., நிர்வாகிகள் சார்பில், சிறப்பு யாக பூஜை செய்தனர். வெற்றிலையில் பூர்ண நலம் பெற வேண்டுதலை எழுதி, யாகத்தில் சேர்ப்பித்தனர். பின்னர், ஆஞ்சநேயர் சுவாமிக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தது.