திருமலை பிரம்மோற்சவம்: ஸ்ரீவி., ஆண்டாள் மாலை அணிந்து மோகினி அவதாரத்தில் சுவாமி உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2016 12:10
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று(அக்.,7) உற்சவர் மலையப்பசுவாமி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை மற்றும் கிளியுடன் மோகினி அவதாரத்தில் தங்க பல்லக்கில் எழுந்தருளினார்.
திருமலை பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட மாலை,கிளி மற்றுமுள்ள அங்கவஸ்திரங்களை திருமலையில் கோவில் ஜீயர்கள் வரவேற்று அழைத்துச்சென்றனர். பின்பு உற்சவர் மலையப்பசுவாமி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை மற்றும் கிளியுடன் மோகினி அவதாரத்தில் தங்க பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலையப்பசுவாமி ஆண்டாள் மாலை அணிந்து வந்ததன் காரணமாக பக்தர்கள் ஆண்டாள் போல வேடமணிந்து ஆடியபடி வந்தனர்.