சிலர் வாழ்வின் துவக்கத்தில் நல்லவர்களாய் இருந்திருப்பார்கள். பதவி சுகம், அபரிமித வருமானம் ஆகிய சந்தர்ப்ப சூழல்கள் அவர்களைக் கெட்ட நண்பர்களிடம் சேர்த்து விடும். இதனால் அறிவு கெட்டு, அவர்களோடு இணைந்து குடிப்பார்கள். பெண் இன்ப சேற்றில் விழுந்து துன்பப்படுவார்கள். ஒரு கட்டத்தில் இந்த தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு பணத்தை தொலைத்து விடுவார்கள். அதன்பின், அவரை ஒட்டியிருந்த நண்பர்கள் ஓடி விடுவார்கள். இவ்வாறு வாழ்வில் கெட்டுக் குட்டிச்சுவரானவர்கள், பெரும்பாலும் தற்கொலை முடிவையே எடுக்கிறார்கள். ஆனால் தற்கொலை இதற்கு பரிகாரமல்ல. இவர்கள் தேவனிடத்தில் தாங்கள் செய்த தவறை வெளியிட்டாலே மனபாரம் குறைந்து விடும். உள்ளத்தில் நம்பிக்கை பிறக்கும். பைபிளில் சொல்லப்பட்டுள்ள “உங்களில் ஒருவர் ஞானத்தில் (அறிவு) குறைவுடையவனாயிருந்தால், யாவருக்கும் பூரணமாய் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன்; அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” என்ற யாகோபு 1:5 வசனம், இவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.