தவறான உறவுகளுக்கான சந்தர்ப்பம் நாடி வந்தாலும் கூட அதை ஒதுக்கி விட வேண்டும் என்கிறது பைபிள். அதில் சொல்லப்படும் ஒரு சம்பவத்தைக் கேளுங்கள். யோசேப்பு பக்தியுள்ள ஒரு வாலிபன். தன்னுடைய சகோதரர்கள் செய்யும் தீய செயல்கள் பற்றி தன் தகப்பனாரிடம் எடுத்துச் சொன்னான். இதனால், பல துன்பங்களைச் சந்தித்தான். பெற்றோரை விட்டு விரட்டிஅடிக்கப்பட்டான். பல இடங்களிலும் அலைந்த அவன் ஒரு வேலையில் சேர்ந்தான். அந்த வீட்டின் எஜமானி அவனைத் தவறான செயலுக்கு அழைத்தாள். அவன் ஒப்புக் கொள்ளவில்லை. கர்த்தரை மனதில் நினைத்து, “நான் ஆண்டவருக்காக பரிசுத்தமாக வாழ்வேன்” என்று உறுதி எடுத்தான். அந்த இக்கட்டில் இருந்து தப்பித்தான். அந்த மனஉறுதிக்குப் பரிசாக கர்த்தர் அவனை எகிப்து நாட்டின் அதிகாரி ஆக்கினார். அந்த நாட்டின் மன்னரே அவனுக்குத் திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தார். தவறான உறவுகள் கர்த்தரால் விரும்பப்படவில்லை.யோசேப்பின் நன்னடத்தைக்காக பெரிய வாழ்வு அமைந்தது போல, கர்த்தரை ஜெபித்து ஒழுக்கமான வாழ்வுக்கு அடிக்கல் நாட்டுங்கள்.