குலசேகரப்பட்டினம் தசரா விழா மாறுவேடமணிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2016 11:10
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் கோயில் தசரா திருவிழாவில் மாறு வேடமணிந்த பக்தர்கள் குவிந்தனர். இரவு 12 மணிக்கு நடக்கும் மகிஷாசூர வதத்தில் பங்கேற்க ஏராளமானோர் திரண்டனர்.
அக்., 1 ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. 10 ம் நாள் விழா: திருவிழாவில் நேற்று அக்., 10 ல் காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு அம்மன் கடற்கரை வளாகத்திற்கு சிம்மவாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணிக்கு கடற்கரை சிதம்பரேஸ்வர் கோயில் முன்பாக எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்தார். 11ம் நாள்விழா: இன்று காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. மாலை 5 மணிக்கு கோயில் வந்து சேர்கிறார். மாலை 6மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் சி.லட்சுமணன், உதவி கமிஷனர் அன்னக்கொடி, நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.