பொள்ளாச்சி கோவில்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2016 12:10
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், சரஸ்வதி பூஜையை மக்கள் விமரிசையாக கொண்டாடினர். கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கோவில்களில், நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒவ்வொரு அலங்காரத்தில், அம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நவராத்திரியின் கடைசிநாளும், முக்கிய நாளாக கருதப்படுவது சரஸ்வதி பூஜை. இந்த நாளில், அவரவர் தொழிலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், கல்வி உபகரணங்கள், வியாபாரத்தில் பயன்படுத்தப்படும் தராசு, படிக்கல் போன்றவையும் சரஸ்வதியாக கருதி வழிபாடு செய்வது வழக்கம். இந்தாண்டும், நவராத்திரி விழா துவங்கியது. வீடுகளில், கொலு பொம்மைகள் வைத்து சுண்டல் உள்ளிட்டவை படைத்து விழாவை கொண்டாடினர். நகரம் மற்றுமின்றி கிராமப் புறங்களை சேர்ந்த மக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க திரண்டதால், அப்பகுதியே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.