திருக்கழுகுன்றம் மலையைச் சுற்றி வரும்போது, வழியில் சொக்கம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு பள்ளம் இருக்கிறது. அதில் இருக்கும் மண்ணை பக்தர்கள் வியாதிகளைப் போக்கும் மருந்தாகப் பார்க்கிறார்கள். அந்தப் பள்ளத்தில் இருந்து மண்ணை எடுத்து, பக்தர்கள் தங்கள் வாயில் போட்டுக் கொள்கிறார்கள். அந்த மண்ணில் தாமிரச்சத்து மட்டுமின்றி, எல்லாவிதமான உலோகச் சத்துக்களும் கலந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அம்மனின் அருளும் சேர்ந்திருப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்!