ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டினாற்போல் இராம்பன் அருகில் கரோல் என்னும் சிறுகிராமம் உள்ளது. இங்கே செல்லும் தென்னிந்தியர்கள் வியப்படைய வைக்கும் ஒரு கோயில் உண்டு. அதுதான், மகா சரஸ்வதி கோயில். முற்றிலும் தென்னிந்தியக் கோயில் - கலைச் செறிவுடன் கட்டப்பட்டிருக்கிறது இந்தக் கோயில். சாலையை ஒட்டி சற்று உயரமான இடத்தில், தொலைதூரத்திலிருந்து பார்த்தாலேயே தெரியக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. ஒருபுறம் உயர்ந்த மலையும், மற்றொருபுறம் சிறிய நீர் வீழ்ச்சி மற்றும் ஓடையும் இயற்கையாகவே இந்தத் தலத்துக்கு எழிலூட்டுகின்றன. கூடவே சந்திர மகாநதிவேறு! சரஸ்வதியின் மகோன்னதத்தை மிக ரம்மியமாக மேம்படுத்துகிறது இந்தச் சூழல்!