ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜபுத்திர வீரர்களின் விழாவாகக் கொண்டாடப்படுகிறது நவராத்திரி. இந்தப் புண்ணியக் காலத்தில் அன்னை பராசக்தி ஒவ்வொருவரது வீட்டுக்கு ஒருமுறையாவது வந்து போகிறாள் என்பது அவர்களது நம்பிக்கை. அதேபோன்று பெண்கள் தங்கள் வழிபாட்டுக்கு அன்னையின் விக்கிரகம் எதையும் உபயோகிப்பதில்லை. சுவரில் வரையப்பட்ட மந்திரம் அல்லது ஸ்வஸ்திக் சின்னத்தையே அன்னை சக்தியாக பாவித்து வழிபடுகிறார்கள்.