சிவத் தலங்களில் தெற்கு நோக்கி அமர்ந்து, சின் முத்திரையுடன், யோக நிலையில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி பெருமான், கழுகுமலை வெட்டுவான் கோயில் விமானத்தில் மிருதங்கத்துடன் காட்சியளிக்கிறார். அவரது முன் இடக்கரம் மிருதங்கத்தைப் பற்றிய நிலையிலும், முன் வலது கரம் விரல்களால் மிருதங்கத்தை இசைக்கும் பாவனையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.