ஒரு சங்குக்குள் மற்றொரு சங்கு, அந்த சங்குக்குள் இன்னொரு சங்கு என ஒரே சங்கில் மூன்று சங்குகள் அமைந்திருப்பதற்கு, திரிசங்கு எனப் பெயர். ராமேஸ்வரத்தில் இதுபோன்ற திரிசங்கு இருக்கிறது. இது, ஆழ்கடலில் கிடைக்கக் கூடியது. ராமேஸ்வரம் தலத்தில் நடைபெறும் விழாக்களின் போது, திரிசங்கு கொண்டுதான் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றன.