பதிவு செய்த நாள்
12
அக்
2016
01:10
திருப்பூர்: விஜயதசமியை முன்னிட்டு, திருப்பூரில் குரு பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. திருப்பூர் சாய் கிருஷ்ணா நுண் கலைக்கூடம் சார்பில், விஜயதசமியை முன்னிட்டு குரு பூஜை விழா, எஸ்.ஆர்., நகர் நவக்கிரஹ ரத்தின விநாயகர் கோவில் வளாகத்தில், நேற்று நடைபெற்றது. இதில், பாரத நாட்டியம், சலங்கை பூஜை, வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றன; நுண் கலைக்கூடத்தை சேர்ந்த, 108 மாணவ, மாணவியர் பங்கேற்று, நடனமாடினர். இதற்கான ஏற்பாடுகளை சங்கர், சந்தியா செய்திருந்தனர்.