பதிவு செய்த நாள்
12
அக்
2016
01:10
திருச்சி: திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள குணசீலம், பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம், நேற்று நடந்தது. ஆண்டுதோறும், புரட்டாசி மாத, திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, 11 நாட்கள், இப்பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்துவது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 2ம் தேதி துவங்கியது. இதையடுத்து பெருமாள், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளினார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று காலை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. விழா நிறைவு நாளான நாளை, ஆடும் பல்லக்கு உற்சவம் நடைபெறும்.